- Happy Republic Day
மதுரை: ஆழ்துளை கிணற்றுக்குள் தண்ணீரின் அளவை எளிதில் கண்டறியும் வகையிலான ஒரு புதிய கருவியை மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். தனக்கான திறன், அறிவு, அனுபவம் யோசனையைப் பயன்படுத்தி புதிதாக ஒன்றை கண்டுபிடிக்க, வயது, கல்வி என்பது ஒரு பொருட்டல்ல என தொடர்ந்து பல்வேறு புதிய கருவிகளை கண்டுபிடித்தவர் மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ரசாக். அந்த வகையில், தற்போது ஆழ்துளை கிணற்றுக்குள் தண்ணீர் அளவைக் கண்டறியும் விதமாக புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளார். இக்கருவி மூலம் குழாய்களை வெளியே தூக்கி கண்டறிவது தவிர்க்கப்பட்டு, மேல்பகுதியில் வைத்திருக்கும் சுவிட்ச் போர்டு மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறுகிறார். மேலும், அவர் கூறியது: ''சிறுவயது முதலே புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகம். ஓரளவுக்கு படிந்திருந்தாலும், அனுபவத்தைப் பயன்படுத்தி ஏற்கெனவே ரைஸ் குக்கர், இருபுறமும் சுழலும் மின்விசிறி, ரயில் தண்டவாள விரிசல் கண்டறியும் கருவி, மாற்றுத் திறனாளிக்கான பிரத்யேக டாய்லெட், ஊன்றுகோள், ராணுவத்தினருக்கான குளிர் தாங்கும் கோட், ஆட்டுக்குடல் சுத்தம் செய்யும்...
Comments
Post a Comment