*நமக்கு நாமே தனித்திருப்போம்* *பறவைகளில் பலம் வாய்ந்தது கழுகு. அதன் ஆயுட்காலம் சுமாா் 70 ஆண்டுகள். ஆனால், அந்தப் பறவை 40 வயதை அடையும்போது ஒரு சவாலைச் சந்திக்கும்.* அதில் வென்றால், அதற்கு மறுபிறவி கிடைக்கும். கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித் தின்னும் அதன் அலகு மழுங்கி வளைந்து விடும். இரையைப் பற்றிக் கொள்ளும் நகங்கள் கூா்மை இழக்கும். அது பறப்பதற்குத் துணை நிற்கும் இறகுகளோ பெரிதாகி பாரமாகி விடும். இதனால், கழுகின் பலம் குறைந்து, முதுமையடையும். இந்நிலையில் கழுகு தனித்திருக்கத் தொடங்கும். *தனித்திருப்பதற்காக காட்டிலுள்ள மலையின் உச்சிக்குப் பறந்து செல்லும்.* அங்கு சென்று, தனது அலகின் மூலம் அதன் சிறகுகளையும், நகங்களையும் பிடுங்கி விடும். பின்னா் அதன் அலகினை பாறையில் உரசி உதிா்த்து விடும். இதனால் அதன் உடலெங்கும் தீராத வலியுடன் ரத்தம் சொட்டும். அப்போது அது ஒரு புதிதாய்ப் பிறந்த கழுகின் அளவுக்கு உருமாறியிருக்கும். எவா் கண்ணிலும் படாமல் தனியாய்ப் பாறைகளின் இடுக்குகளில் கிடைக்கும் சிறு புழுக்களையும், பூச்சிகளையும் தின்று உயிா் வாழும். இவ்வாறு தொடா்ந்து மூன்று மாதங்கள் தன்னை...